1. எவ்வளவு தூரம் போனவரும்
திரும்பி விட்டனர்
தவறான பாதையென்பதறிந்து
திரும்ப முடியாமல்
பாதை மட்டும்
2. கை தவறிக் கொட்டிய
வண்ணங்களின் சிதறலில்
விரியும் ஓவியச் சாயலாய்
விரும்பப்படும் வாழ்க்கை
தற்செயல்களின் நீட்சியாயினும்
3. பதுக்கி வைத்து
தெளித்தது மரம்
பழுத்து உதிரும்
இலைக்காக
நேற்றைய மழையை
4. புற்களைப் பறித்து
கூண்டுக்குள் போட்டு விட்டு
சாப்பிடுவதைக் காண
காத்திருந்தன குழந்தைகள்
வெறித்துக்கொண்டிருந்தது முயல்
வெளியில் தெரியும்
புல்வெளியை
5. இரை தேடும் பறவையாய்
இங்குமங்கும்
இறை தேடும் மனது
- க.ஆனந்த் (