கீற்றில் தேட...

மோட்டு மடையது
முனகித் தீர்க்க
இப்ப ஆழ மடையும்
அழுது வடியுது
வடிச்சுத் தின்னுருந்தாலும்
மனசு ஆறியிருக்கும்
நாத்து வீணா வளர்ந்து
சோர்ந்து நிக்கிது
இது பஞ்சம் படர்ற மார்கழி
அதிகாரி வீட்ல
ஆந்திரப் பொன்னி
வியாபாரி வீட்ல
கர்நாடகப் பொன்னி
இங்க எங்களத் தவிர
வேற யாருக்குப் பஞ்சம்?
மண்வெட்டி தவிர
வேற புடிச்சிப் பழகல
கேப்பையும் களியும்
நாங்க தின்னு பழகல
கோழிக்கு இருந்த
குருணையும் தீர
இனி கொட்டாயில
தொங்குற குருண மருந்து
தான் மிச்சமிருக்கு...

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)