எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருந்த
எந்த வாகனத்தின் வெளிச்சமும்
உன் சுவாசத்திற்கான
என் தேடலை
பெரிதாய் சிதைக்கவில்லை...
உன்
விரல்களைக் கோர்த்தபடி...
தோள்மீது சாய்ந்தபடி...
தயங்கித் தயங்கி
விழிகளைப் பார்த்தபடி...
உன்னிதழின் ஈரத்தை எதிர்பார்த்தபடியே
உன்னோடு நடந்துகொண்டிருந்தேன்...
உணராத ஒரு நொடியில்
பயணம் முடிந்துவிட்டிருந்தது...
நீளாத பாதை
நீண்டதாய் எண்ணிக்கொண்டு
நானறியாத உன்னிதழீரத்தோடு
தனியே நடந்துகொண்டிருக்கிறேன்
என் வீட்டையும் தாண்டி...
- தனி (
கீற்றில் தேட...
உன் இதழ் ஈரத்தோடு...
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்