வழி தப்பிய ஆடு ஒன்று
குள்ள நரியின்
கண்ணில் அகப்பட்டது
மேய்ப்பன்
சற்று கண் அசந்ததால்
ஆடு தப்பிக்க ஏதுவாகியது
மாமிசமாகிவிட்ட பிறகு
இனி அதன் பெயர்
ஆடு அல்ல
இரையைத் தின்று செரித்த
நரி
மயானத்தில் ஊளையிடுகிறது
எதைப் பார்த்தோ
புதையலுக்கு நரபலி கேட்கும்
பூதம் உலாவும்
வேளை அது
மந்தை ஆடுகளில்
ஒன்றை இழந்தது
மேய்ப்பனுக்கு பேரிழப்பு
மற்ற ஆடுகளுக்கு
இழப்பு ஏது தவிப்பு ஏது
மேய்ச்சல் நிலம்
இருக்கும் போது.