வீழ்ந்து கிடக்கிறது
காலம்.
வீழ்த்திச் சென்றவர்களின் அடையாளங்கள்
கறைகளாகிக் கிடக்கின்றன.
வெயில் உறிஞ்சிய நீர் என
உலர்ந்து கிடக்கிறது
என் நிழல்.
கறையோ....நிழலோ...
நாளை...கலைந்துவிடக்கூடும்....
நாம் அறியாமலேயே.
அப்போதும்....
ஏதும் அறியாததைப் போல்
வீழ்ந்தே கிடக்கும்
இந்தக் காலம்...
நாம் அறியாத புன்னகையை
தனக்குள் இரசித்தபடி.
- ரமேஷ் அனந்தபத்மநாபன்