வீரவணக்கம் வீரவணக்கம்
தமிழினத்தின் குறியீடுகளே
தன்மானத்தின் நாயகர்களே!
வீரவணக்கம் வீரவணக்கம்
சங்க காலத் தமிழினத்தின்
புறநானூற்றைப் புதுப்பித்தவர்களே!
தமிழன் என்ற இனத்தை
உலகிற்கு அடையாளங் காட்டியவர்களே!
மண்ணை மீட்க
மண்ணில் கலந்த மாவீரர்களே!
மானமும் வீரமும் விளைய
எருவாகிப் போனவர்களே!
மீண்டும் பிறப்பீர்; பகை அழிப்பீர்
அதுவரை
உங்கள் உயிர்காற்றை
நாங்கள் உட்கொண்டிருப்போம்;
உங்கள் தடந்தோள்களில்
சூடப்பெறவே வாகை மலர்கள்
பூக்கக் காத்திருக்கின்றன!
மானத் திருவடியை வணங்கினோம்
வீர வணக்கம் வீர வணக்கம் வீர வணக்கம்!
- குயில்தாசன்