நாம் இப்படித்தானென
அடையாளப்படுத்திக் கொள்ளாத
ஏதோ ஒன்றில் தான்
அறிமுகமானோம்
நேசிக்கவோ
பரிமாறவோ
சண்டையிடவோ
ஏதுமில்லா
வெற்றுக்காரணங்களை தூக்கிவருகின்ற
அன்பிற்கு
அடிபணிந்தே தான் கிடக்கிறது
மனம்.
சற்று தடுமாற்றம் தருகின்ற
இந்த உணர்வுதனை
மறைத்தலில்
தொடங்குகிறது
எல்லோருக்குமான
தோல்வி...
- ரேவா