கீற்றில் தேட...

அவன்
தன்னைக் கடவுளென
பறைசாற்றுகிறான்!

ஆயுதங்கள்
அவனடி பணிகின்றன!

உயிர்களை பொம்மைகளாக்கி
விளையாடுகிறான்!

கொலைக்களங்களை
மைதானங்களாக்கி
கொலைகளைப்
பொழுதுபோக்கென
செய்கிறான்!

ஊடகங்களின்
குரல்வளைகள்
அவன் கைகளுக்குள்
சிக்கித் தவிக்கின்றன!

எல்லாம் ஒய்ந்த
ஒருநாளில்
புழுக்களும், ஈக்களும்
மொய்க்க
அழுகிக்கொண்டிருக்கிறான்
பதுங்குகுழிக்குள்!

- அதீதன்