சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
புவிவெப்பம் தணிக்கும் சமதர்மம் தன்னை
ஏற்றிட வேண்டும் உயிர்வாழ்வு தொடரவே
(ஊரிலோ திருவிழா; அதற்குப் போக வேண்டும். மனைவிக்குப் பேறுகால சமயம்; அவளுக்கும் சென்று உதவ வேண்டும். மாலை வேளை; மழை பெய்து கொண்டு இருக்கிறது. (இப்படிப்பட்ட சமயத்தில்) கட்டிலைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒருவனுடைய கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ, அவ்வளவு வேகமாக, இவ்வுலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, புவி வெப்ப உயர்வைத் தணிக்கும் (உற்பத்தி முறையைச் செயலாக்கும் வல்லமை கொண்ட) சோஷலிசத்தை ஏற்றிட வேண்டும்)
- இராமியா