முத்துக்கள் கொட்டிக்கிடக்கும்
வசீகர கடலில் இருந்து
அலை அலையாய் எழும்
உன் வலைச்சிரிப்பு..!
வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையிடம்
அஞ்சிக்கொண்டு இருக்காமல்
மண்ணை மீறும் விதையாக
மாறாமல் போராடும்
உன் பெண்மையின் பேரன்பு..!
காய்த்துக் கிடக்கும்..
உன் விரல்களில்
கைரேகை போலவே..
காணாமல் போயிருந்தது
காதல் ரேகை..!
பன்னீர் மரத்தடியில் நின்று கொண்டு
கொட்டும் குளிர் பூக்களை..
இரசித்துக் கொண்டிருக்கிறேன்..!
உன் கண்ணீர்
பூக்களாக மாறும்
இரச வாதம் புரியாமல்..!
- அமீர் அப்பாஸ்