பயன்படு பொருட்கள் மிகுந்திருந் தாலும்
பயன்பெறு நுகர்வோர் அடையா வண்ணம்
சந்தை விதியில் அழுந்திடும் மக்கள்
சிந்திடும் கண்ணீர் கடலினும் பெரிதே
ஊழியைக் கொணரும் புவிவெப்ப உயர்வு
வாழிடம் தன்னைக் குறைத்திடும் முன்னே
சமதர்மம் ஏற்றுச் சந்தையை ஒழிப்பீர்
நமதுயிர் வாழப் புவியைக் காக்கலாம்
பக்க விளைவாய் விடுதலை பெறலாம்
 
((மக்களுக்குப்) பயன்படும் பொருட்கள் மிகுதியான அளவில் (உற்பத்தி செய்யப்பட்டு) இருந்தாலும்,  அவற்றை நுகர்வோர் அடையா வண்ணம் சந்தை விதிகள் தடுப்பதால், பாதிக்கப்படும் மக்கள்  சிந்தும் கண்ணீர், கடலினும் பெரிதாகும். இப்புவியின் அழிவைக் கொண்டு வரும் புவி வெப்ப உயர்வு (பனிமலைகளை உருக்கி) நிலப் பரப்பைக் குறைத்திடும் முன்பேயே, சோஷலிச உற்பத்தி முறையை ஏற்று, முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிப்பீர். (அதனால்) நமது உயிர் வாழ இப்புவியைக் காக்கலாம். பக்க விளைவாக (உழைக்கும் மக்கள்) சுதந்திரம் அடையலாம்.)

- இராமியா