பால்பூத்
ரேஷன் கடையில்
தொலையும் பகல்.
காலையிலும் மாலையிலும்
காலாற துணைக்குப் போக
பேரக்குழந்தைகளின்
பள்ளிக்கூடம்.
மகனும் மருமகளும்
மீண்டு வரும்வரை
பணிவிடை செய்யும் தனிமை.
நவீன ஒப்பனைகளுடன்
நகரத்து வாழ்க்கையை
பகிர்ந்து கொண்டாலும்
கனவுகளில் வந்து போகும்
கிராமத்து திண்ணைக்காக
தனிமையில் தவித்துக் கிடக்கும்
மனசு.
கீற்றில் தேட...
தவிப்பு
- விவரங்கள்
- கி.மூர்த்தி
- பிரிவு: கவிதைகள்