# நான் தேடும் திசைகளில்
நீ இருப்பதில்லை
மழை எனக்கு பிடிக்கும் என்பதால்
நீ எங்கோ
நனைந்து கொண்டிருப்பாய்...!
# நான் விழித்துக்கொள்வேன்
உன் விரல்
என் மௌனத்தை
மெல்ல வருடும்போது...!
# ஏதேதோ சொல்ல நினைத்து
உன் பெயரை சொல்லி முடித்தேன்
விழிகளால் வீழ்த்தி
நகம் கடித்த நாணங்களோடு
வன்முறை துவங்குகிறது...!
# ஒரு கணம்
விழி உறைந்து
நான் உடைந்து
உன் சாயலில்
எனைக் கடக்கும் யாரோ... !
# நீ அழைக்கும் தூரத்தில்
நான் இருக்கின்றேன்
இன்னும்
உன்னில் சாந்தம் பிறக்கவில்லை
நான் செல்லும் வெளியைப் பார்
மரணத்தின் வாசல் திறந்தே கிடக்கிறது... !
# திறந்த விழியினூடே
விரக்தி பெருகி
வேர்த்து வழிகிறது நினைவு...!