சாதியின் பேராயுதம் கொண்டு
கட்டமைக்கப்படுகிறது
தீண்டாமையின் மூலதனங்கள்

சமூக வெளியும் பொதுச்சொத்துக்களும்
அரசியல் அதிகாரமும் பதவியும்
பரவலாக்கப்படவேண்டுமென
எப்போதெல்லாம்
கடைக்கோடி மனிதர்கள்
காலூன்றத் தொடங்குகிறார்களோ
அப்போதெல்லாம் எரிந்து கொண்டிருக்கும்
சேரிக்குடிசைகளும்
குடிசைக்குள் மனிதர்களும்…

எவற்றைப் பகிர்ந்தளிக்கட வேண்டுமென
கோரிக்கைகள் எழுப்பப்படுகிறதோ
அதன் மீது புனிதத்தின் கொடிகளும்
சாதியத்தின் வருணங்களும் வேரூன்றப்படுகின்றன

அநீதியை நிலைநிறுத்த
அரவாணிகள் வேசமணிந்து
புனிதத்தின் புழுக்களை
மேனிமுழுதும் அப்பிக்கொண்டு
சொறிந்துகொள்ளத் தோதுவாய்
பூணூலிட்டு அதிகாரத்தை கட்டியெழுப்புகிறார்கள்

யாருக்கும் தெரியா சமஸ்கிருத மொழியை
சர்வாதிகாரத்திற்கான ஆயுதமாய் கையிலேந்தி
பூமியெங்கும் சமஸ்கிருதமயமாக்கலாய்
முணுமுணுத்துச் செல்கிறார்கள்
பிறரையும் முணுமுணுக்கச் செய்துவிட்டார்கள்

யாரையெல்லாம் இழிவென
ஊருக்குப் புறத்தே ஒதுக்கி வைத்தார்களோ
யாரையெல்லாம் தீட்டெனக் கருதி
தீண்டாமைக் கொடுமைகளை ஏவி விட்டார்களோ
அவர்களும் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள்
பார்ப்பனிய மேலாதிக்கத்தை
தன்னை புனிதப்படுத்திக் கொள்ளவதற்காக…

சமகாலச்சூழலில்
பூணூல் குடுமிகளின்றி மந்திரங்களின்றி
நடைபெறுவதில்லை
இல்ல விழாக்களும் ஊர்த்திருவிழாக்களும்…

நடந்து முடிந்ததாய் திருப்தியுற்று
புனிதமெனும் மனநோயை பரப்பிக்கொண்டிருக்கும்
அறிவியலுக்குப் புறம்பான அநீதிகளை
வேரோடு வெட்டியெறிந்திட
அறிவாயுத அரசியலைக் கையிலேந்தி
பிரளயமாய் கிளர்ந்தெழுந்து போராடட்டும்
வரும் தலைமுறையாவது…

- நீதிமலர்