கீற்றில் தேட...

bird_400

நெடுந்தூரம் பயணித்துவிட்டேன்...

மெல்லிய என் சிறகுகள்
களைப்பாயிருக்கின்றன...

இளப்பாறும்படியாய்
உன் கிளைகளில்
சற்று நேரம்
அமர்ந்து கொள்கிறேன்...

இளைப்பாறியவுடன்
நான் என் பயணத்தைத்
தொடர வேண்டும்...

நான் போக வேண்டியதோ
இன்னும் வெகுதூரம்...

உன் அன்பெனும் ஆயுதத்தால்
உன் கிளைகளை
என் சிறைகளாக்கிவிடாதே...

பயணத்தைத் தொடர
நான் எத்தனிக்கையில்
என் கண்களை மட்டும்
பார்த்துவிடாதே...

நான் போக வேண்டியதோ
இன்னும் வெகுதூரம்...

உருளும் இந்த உலகத்தில்
உன்னைக் கடந்தே
நான் செல்ல வேண்டியிருக்கும்
என் அடுத்த பயணத்திலும்...


- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)