கீற்றில் தேட...

கோபப்படத் தெரியாதவள்
காதலியாக இருக்க முடியாது;
வசவு வாங்க  முடியாதவன்
காதலனாக இருக்க முடியாது;

காதல் கடவுள் சபித்திருக்கிறான் போலும்
செல்லச் சண்டைகளில் கூட
ஆண்களே தோற்க வேண்டும் என

'கோபத்தில் தான் பேரழகாய் இருப்பை நீ'

இப்படித்தான் ஏதேனும் பொய் சொல்லி
புன்னகைக்க வைத்து
தவிர்க்க வேண்டி உள்ளது
வசவுகளை
எல்லா நேரங்களிலும்

- பாரி மைந்தன்