கிளையில் இளைப்பாறும்
பறவைகள்யாவும்
பயணத்தைத் தொடரவே
விரும்புகின்றன,
பறவை குறித்த
கிளையின் விருப்பங்களைத் தாண்டி...
இளைப்பாறுதல் தற்காலிகமும்
பயணம் நிரந்தரமுமென்றே
பயற்றுவிக்கப்படுகின்றன
பறவைகள்...
- தனி (
கீற்றில் தேட...
இளைப்பாறுதல் தற்காலிகமும் பயணம் நிரந்தரமும்
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்