பனிமூடிக் கிடக்கும்
மேப்பில் மரங்களுக்குள்
மறைந்து கிடக்கின்றன
என் கனவுகள்...
சொட்டு சொட்டாய்
சொட்டிக்கொண்டிருக்கும்
மேப்பில் சாறோடு
சேர்ந்து வழிகின்றன
என் கனவுகளின்
சில பக்கங்கள்...
சில சொட்டுக்களை
சேகரிக்கையில்
உனக்கான என்
கவிதைக் குறிப்புகள்
புலப்படலாம்...
- தனி (