எதனைச் செய்ய வேண்டும் என நினைத்தார்களோ
அதனைச் செய்திருக்கிறார்கள்
எது நடக்க வேண்டும் என நினைத்தார்களோ
அதனை நடக்கச் செய்திருக்கிறார்கள்
அவர்கள்
தாம் நிரப்பவேண்டியவைகளை நிரப்பும் முன்
இவர்களை
இழக்க வேண்டியவைகளை இழக்க
அணியப்படுத்திவிட்டார்கள்
காவல் நாய்கள்
கஞ்சி ஊற்றும் உரிமையாளர்களைக் குதறிவிட்டன
ஆபத்தில்லை என்றவர்களே
உயிரைப் பறித்திருக்கிறார்கள்
கரடி
தேன்கூட்டில் கைவிட்டிருக்கிறது
இங்கு அங்கு என
எங்கெங்கும் சீறிக்கிளம்பும் தேனீக்கள்
இனி கொட்டித்தீர்க்காமல் விடா