குத்திக்கிழிக்கப்பட்ட
என் சிறகுகளில்
இரத்தம் இன்னும்
சொட்டிக்கொண்டிருக்கிறது...
கிழிந்து தொங்கும்
என் மெல்லிய சிறகுகள்
இதயத்துடிப்போடு
ஒன்றித் துடிக்கின்றன
மிகுந்த வலிகளோடு...
காயங்களாறும்வரை
காத்திருக்க நேரமில்லை...
காயங்களாற வாய்ப்புமில்லை...
கிழிந்த சிறகுகளோடு
தொடங்குகிறது
என் பயணம்...
இரத்தம் இன்னும்
சொட்டிக்கொண்டேயிருக்கிறது...
என் பயணத்தின் வழியெங்கும்
உறைந்துகிடக்கலாம்
என் இரத்தத்துளிகள்
மெல்லிய சிறகுகளின்
வலிகளை உணர்த்தியபடி...
என்றேனும்
நான் பயணித்த பாதைகளில்
நீ பயணிக்க நேர்ந்தால்
உறைந்து கிடக்கும்
இரத்தத்துளிகள்
என்னுடையதுதானென்று
உறுதியாய் எண்ணிக்கொள்...
முடிந்தால்
உன் ஒரு சொட்டு
கண்ணீரை விட்டுச் செல்...
- தனி (