கீற்றில் தேட...

பனிமூடிக் கிடக்கிறது
என் கூரை...

உதிராமல் இன்னும்
உயிர்த்திருக்கின்றன‌
என் இலைகள்...

உறைந்த பனிக்கும்
உதிராத இலைகளுக்குமிடயே
முரண்களோடு தொடர்கிறது
என் பருவகாலம்...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)