கீற்றில் தேட...

மடங்கலின் சின¨இ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை பின்புலம் இருக்க
முதலிகள் நிலைக்க உழைப்பவர் உரிமையைச்
சிதலையாய் அரிக்கும் சந்தை விதிகளை
மாய்த்திடும் வலிமை பெறாது போயின்
ஆய்ந்த அறிவின் தேர்ந்த முடிவாய்
மார்க்சும் எங்கெல்சும் அருளிய அறிவின்
சீர்மை அறியா அறிவிலி யாவோம்
முடியும் என்றே நிறுவிக் காட்டிய
மடியிலா லெனினின் பாதை தொடரா
சோம்பர் மிகுந்த செயலிலி யாவோம்

(சிங்கம் போலச் சீறி வரும் அடங்காத உள்ளமுடைய படைகளை, (தேவைப்பட்ட பொழுது பயன்படுத்துவதற்காக) பின்புலமாக வைத்துக் கொண்டு, முதலாளிகள் நிலைப்பதறகாக, உழைக்கும் மக்களின் உரிமைகளைக் கறையானைப் போல் அரிக்கும் சந்தை விதிகளை மாய்த்திடும் வலிமையைப் பெறாது போனால், கார்ல் மார்க்சும், பிரடெரிக் எங்கெல்சும் ஆழ்ந்த அறிவினால் ஆராய்ந்து முடிவாக அளித்த (பொதுவுடைமைத் தத்துவ) அறிவின் மேன்மையை அறியாத அறிவிலிகள் ஆவோம்; (சோஷலிச சமூகத்தை அமைக்க) முடியும் என்று அமைத்துக் காட்டிய, ஓய்வறியா லெனினுடைய பாதையைத் தொடராத சோம்பல் கொண்ட செயலற்றவர்களும் ஆவோம்.)

- இராமியா