கீற்றில் தேட...

காணாமற் போனவன் குறித்து
புகார் தருகையில்
கேட்டார்கள் ....
அவன் என்ன ஆடை உடுத்தியிருந்தான்?
அது நீலத்தின் சாயலா?
பச்சையின் சாயலா?
கோடு-நீலத்தில் பச்சையா?
பச்சையில் நீலமா?
அதை அணிந்து
அவர் பார்த்தார்-
மாற்றிப் போனானோ...?
அவன் காணாமற் போனது...
அப்போதா?-எப்போதோவா?

சுழலும் கேள்விகளின்
விடை மனதிற் படியாமல்
திறந்த பேனாவோடு
அமர்ந்திருக்கும் தந்தைக்கு
நீங்கள் உதவ முடியுமா?
அந்தப் பேனாவின்
மை
உலர்ந்து கொண்டிருக்கிறது.

- உமா மோகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)