கீற்றில் தேட...

அனைத்தும் எனக்குப் பிடிக்காத
காலங்களில் நடந்து முடிந்துவிடுகின்றது
பின்னர் ஆறஅமர உட்கார்ந்து
என்னுள் அழுதுகொள்ள ஏதுவாக

அனைத்தும் எனக்குப் பிடிக்காத
காலங்களில் என்னை விட்டு
விலகிச் சென்று விடுகின்றது
பின்னர் எங்கேனும் அமர்ந்து ஆசுவாசத்துடன்
என்னைத் தேற்றிக் கொள்ள ஏதுவாக

அனைத்தும் எனக்குப் பிடிக்காத
காலங்களில் என்னால் மறுதலிக்கப்படுகின்றன
பின்னர் எனக்குப் பிடித்த காலங்களில்
அவைகள் பற்றி நினைத்து
எனக்குள் மாய்ந்துகொள்ள ஏதுவாக

எனக்குப் பிடித்த எதுவும்
நான் விரும்பும் காலங்களில்
என்னோடேயே இருந்துவிடுமாயின்
இப்படி எழுதி வைத்துக்கொள்ள வாய்க்காது
உங்களிடம் வந்து நான் சொல்வதற்கு ஏதுவாக.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)