நீ கல் வீசி எறிந்த குளத்தில்
உருவாகத் துவங்கும்
எனது நீர் வளையங்கள்.
அலை...அலையென எதிர்காலமாய்
விரியும் அது விரையத் துவங்கும்
மூழ்கும் உன்னைப் பற்றும்
பேராவலுடன்.
மூழ்கும் உன்னிலிருந்து முகிழ்க்கும்
நீர்க்குமிழ்களில்தான்
நான் அடைத்து வைத்திருக்கிறேன்
கடவுளும் அறியாத என் கனவுகளை.
காற்றின் உரசலில்-
உடையும் என்னையும்...
மூழ்கும் உன்னையும்
காப்பாற்றும் எண்ணமற்று....
காத்திருக்கின்றன
சில தூண்டில்கள்....கரையில்
வேறெதையோ....எதிர்பார்த்தபடி.