கீற்றில் தேட...

இன்மை வலையில்
சிக்கிய ஈயாய்
இருப்பு
முற்றிலும் உறிஞ்சப்பட

பொய்ம்மையின்
கோரக் கொலைவெறிக்கு
யதார்த்தங்கள்
சிதைக்கப்பட

புனைவுகளின்
அகோரப்பசிக்கு
நிஜங்கள்
இரையாகி அற்றுப்போக

முகங்கள் அற்ற வெளியில்
முடிவற்ற நீட்சியில்
வாழ்க்கையைத் தேடி
அலையும்
மனிதம்