மூன்றாவது கொலைக்கான
நேரத்தைக் குறித்து விட்டேன்
காரணம் பின் தேடிக் கொள்ளலாம்.
யாரை அல்லது எதை
என்பதை தெரிவு செய்யத்தான்
உன் பின் அலைகிறேன்
நீ திரும்பிப் பார்க்கும் நேரம்
நிச்சயம் எதாவது நிகழக் கூடும்
பின்
கொலை செய்யப் படுவது
நீ அல்லது நானாகவும் இருக்கலாம்
திரும்பிப் பார்க்காமல் போவதில்
இருவருமே கொல்லப்படும் சாத்தியங்கள் உள்ளன
எனினும் கொலைக்கான காரணத்தை மட்டுமே
தேட ஆரம்பித்து விட்டேன் இப்போது.
கீற்றில் தேட...
மூன்றாவது கொலை
- விவரங்கள்
- பத்மஜா
- பிரிவு: கவிதைகள்