கீற்றில் தேட...

என்னை ஈர்த்துவிடுகிறது
உனது பெயர் குறித்தான
எந்த ஓசையும்.

இரவில்-
எனது கூடுகளுக்குள் தன்னைச்
சுருட்டிக் கொள்ளும் வானம்
விரியத் துவங்குகிறது என் மேல்
உனது நினைவுகளோடு
ஒரு பெரும் மழையென.

அறிய இயலாத ஒரு பெரும் ஆழத்தில்
பயணிக்கிறது மனம்...
வெளிவரும் வழியை அறிவதற்கற்றும்..
விருப்பமற்றும்.
 
தவிப்பில்-
உறக்கம் அற்றதாகி...
விழிப்பும் அற்றதாகி விடுகிறது
எனது காலம்...

உன்னைத் தொடரும்
ஒரு முடிவற்ற பயணத்தை
இரசித்தபடி.