கீற்றில் தேட...

உன்னிடம் விடையற்றதாகி விட்டது
எனது கேள்விகள்.

மேகம் உடைத்து விழும் மழையென
விழத் துவங்குகிறது நம் உறவு.

ஒரு மரமென நின்றபடி...
அசைவற்று நீ அவமதிக்கும்
என் அன்பு
தன் நிலை தடுமாறும் ஊன்றுகோலற்று.

நம் விரல்களில்...
நம் விழிகள் பயணித்த நாட்களில்
ஏராளமான வெளிச்சச் சிறகுகளோடு
நீ சூரியனாய்.
உன்னைச் சுற்றிய வட்டப்பாதையில்
நான்.

இன்றோ-
உனது அலட்சியங்களால்
என் வெளிச்சச் சிறகுகள்
உதிர்ந்துவிட....
நகர்கிறேன்...
உதிர்ந்த நட்சத்திரங்களுடன்
ஒரு நிலவெனத் தனிப் பாதையில்.

நாளை
என்றாவது நிகழும்
இந்த நிலவின் மரணம்....

ஒரு மரணத்தின் இரண்டாம் பாகம்
என அறிந்தே இருப்போம்
நீயும்....நானும்.