நினைவில் தக்க வைத்துக்
கொள்ள எண்ணும் தருணத்தை
தொலைத்து விடுவதில்
வந்து முளைக்கின்றன
எனக்கான வார்த்தைகள்
மிச்சப்படும் வார்த்தைகளை
சேகரித்துக் கொண்ட
பஸ் டிக்கெட் மருந்துச்சீட்டு
ஹோட்டல் பில்
அர்ச்சனைச் சீட்டு
தியேட்டர் டிக்கெட் என
குறிப்புக் காகிதங்களாக
நிரம்பி வழிகிறது மேசை.
எழுதப்படாத கவிதையைச்
சுமந்து கொண்டு கனக்கிறது
என் அறையும் இருதயமும்
- சோமா (