அன்பில்லாத பெருவெளியில்
அவள்
தனித்துப் பயணித்தாள்
கட்டுப்பாடுகள்
கலாசாரம் பேசிக்கொண்டு
திரைமறைவில்
தேடியணிகின்றன
முகமூடிகளை..
அன்புக்காக ஏங்கி அழுகின்ற
கண்ணீர் விழிகளுடன்
அன்பில்லாத
பெருவெளியில்- அவள்
தனித்துப் பயணித்தாள்
அழுத கண்கள்
குருடாவதற்குள்-அவள்
விழித்தாக வேண்டும
அன்பில்லாத
அப்பெருவெளியில்
அவளைப்போலவே
இன்னும் பல அவள்கள்
அலைவதைக் கண்டாள்
அவள்களுக்காக அவளும்
அவளுக்காக அவள்களும்
அழுவதென்று
அறுதியானது
இப்போது
அவள் மனவெளியெங்கும்
குளிர்கின்ற கண்ணீர்
- அமானுஷ்யா (