உரித்தெறியப்பட்ட பாம்பின் சட்டையென
சலனமற்று இருக்கிறது மரணம்.
எப்போது தலைகாட்டும் எனத் தெரியாத
தலைமுடி போல்
ஒளிந்தே இருக்கிறது அது.
நேற்றைய கனவுகள்...
நாளையும் வளரும்
என்னும்
அதீத நம்பிக்கையோடு
அவரவர் சிறகுகளோடு...
அவரவர் பயணம்....
எல்லைகளும்...திசைகளுமற்று.
மரணம் குறித்த ப்ரக்ஞையற்று
மனிதர்கள்
நகர்கையில்...
பிளவின் நாக்குகளோடு
நகர்கிறது மரணம்
இரைகளை நோக்கி.