என்மீ தாசையும் மக்களின் பாசமும்
குன்றனை உழைப்பையும் கடுகென ஆக்கும்
ஆயினும் முடிவில் முதலிக்கே போவதும்
பேயினும் கேடாய் உறுத்தும் மேலரும்
கடுகனை உழைப்பையும் குன்றென அழுத்தும்
சுடுகின்ற சூழல் தன்னை மாற்ற
உழைப்பவர் அரசை அமைத்திட முயல்வாய்
((என் வாழ்க்கைத் துணையே) என் மீது நீ கொண்டுள்ள ஆசையும், நம் மக்களின் மீது நாம் கெண்டுள்ள பாசமும், மலையளவு உழைப்பையும் கடுகளவு சிறியதாக ஆக்கும். ஆனால் நம் உழைப்பின் பயன் அனைத்தும் முடிவில் முதலாளிகளுக்கே போய்ச் சேருவதும், (நமக்கு மேல் அமர்ந்து கொண்டு இருக்கும்) மேல் நிலை அதிகாரிகள் நம்மைப் பேயினும் கேடாக உறுத்திக் கொண்டு இருப்பதும், கடுகளவு உழைப்பையும் மலையளவு போன்ற அழுத்தத்தைக் கொடுக்கின்றன. (நம்மைச்) சுடுகின்ற இச்சூழலை மாற்ற உழைப்பவர் அரசான சோஷலிச அரசை அமைத்திட முயல்வாய்.)
- இராமியா