கீற்றில் தேட...

 

மேகம் கறுத்த வானத்தின் நீலம்
கொக்குகள் நடந்த ஈரத்தில் கோலம்
மழையில் வரப்பில் அமர்ந்த ஒற்றைப் பருந்து
நண்டுகள் ஊரும் வாய்க்காலின் ஓரம்
தொலைவில் கிழவியின் தலையில் புல்லின் பாரம்
உழவு வயலின் சேற்றின் நாற்றம்
அருகில் முளைத்த எருக்கின் நாற்றம்
நீரில் முளைத்த விதையின் நாற்றம்
பாசி படிந்த மடை நீரின் நாற்றம்
வரப்பில் முளைத்த அருகின் நாற்றம்
தினம் பார்த்து வளரும் பச்சையின் நாற்றம்
நெற்பயிரில் கட்டிய பாலின் நாற்றம்
எங்கள் வீதியெங்கும் வெள்ளாமையின் நாற்றம்
இப்படி இருந்த காலம்
நான் வளர்ந்த காலம்-என்
தேசம் வளர்ந்த காலம்-இவற்றை
நான் இழந்த காலம்

 

- அருண் காந்தி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)