இழையோடும் சுவாசம்
இடையிடையே வந்து போகும்.
இருப்பினை மறந்து
கனவில் மனம் சிறகடிக்கும்,
ஆணா பெண்ணா என்ற
அவதியான ஆரம்பத் தவிப்பு
மெல்ல மெல்ல மறையும்.
சுகமான பிரசவத்திற்கு
அனைவரது மனமும்
ஒரு சேர வேண்டி காத்துக் கிடக்கும்.
பிறந்த குழந்தையின்
முதல் அழுகை கேட்க
அயர்ந்துறங்கும் மனைவியின்
இரு கைகளை ஆதரவாக
தன் கைகளில் குவித்து
கண்களில் நீர் பனிக்க ஒற்றியெடுக்க
அவசியம் தேவை
அவளுக்கு ஒரு நன்றி முத்தம்
- பிரேம பிரபா