கீற்றில் தேட...

நீர்மிகின்,சிறையும் இல்லை; தீமிகின்,
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; எனினும்
ஒளிமிகு வாழ்வை மீண்டும் கொணர
தெளிந்த திறனோ மனிதர்க்கு உண்டு
புவிவெப்ப உயர்வு எல்லை கடந்தால்
அவிவதைத் தடுக்கும் அரிச்சுவடி இல்லை.
விழித்தெழு மனிதா! வாய்ப்புள்ள போதே
அழிவைத் தடுக்கும் சமதர்மம் ஏற்பாய்!

(பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தைத் தடுக்கவொரு தடையும் இல்லை. மிகுந்து விட்ட நெருப்புக்கு அஞ்சி ஒதுங்க ஒரு நிழலும் இல்லை. கொடுங்காற்றை எதிர்க்க ஒரு வலியும் இல்லை. எனினும் இவை ஏற்படுத்திய அழிவுகளை மாற்றி மீண்டும் ஒளிமிகு வாழ்வைப் பெற, தெளிந்த அறிவுத் திறன் மனித குலத்திற்கு உண்டு. ஆனால் புவி வெப்ப உயர்வு எல்லை கடந்தால் இவ்வுலகம் அழிவதைத் தடுக்க, அரிச்சுவடி அறிவும் மனித குலத்திற்கு இல்லை. (ஆகவே) விழித்தெழு மனிதனே! வாய்ப்புள்ள போதே (அதாவது புவி வெப்பம் எல்லை கடப்பதற்கு முன்பேயே) இவ்வுலகை அழிவில் இருந்து காக்கும் (ஒரே வழியான) சோஷலிச முறையை ஏற்றுக்கொள்.)

- இராமியா