அஸ்லாம் அலைக்கும்...
ஆதாம் ஏவாள் செந்நீர் நாளம்
முப்பாட்டன் முப்பூட்டன்
ஆச்சி பேச்சியின் தொப்புற்கொடி
உன் என் பாட்டன் மாமனாய்
என் உன் அப்பன் மச்சானாய்
களித்திருந்த கரிசல் மண் -
யாருக்குச் சொந்தமெனும்
குண்டுகள் தேநீர் கடை அரசரடி
பஜார் கதிரடிக்கும் களமென
வெடித்துக் கொண்டிருந்தன-
ஹஜ்க்கு என் பாட்டனையும்
காசிக்கு உன் பாட்டனையும்
ஒன்றாயமர்த்தி வடக்குச்
சென்ற ஜனசகாப்தி எக்ஸ்பிரஸ்
மீண்டும் திரும்பவேயில்லை.
- சோமா (