இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்து
படையல் செய்ய துணிந்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்
பிள்ளைக்கறி சமைத்து
படையல் வைக்கமுயன்றவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்
சுண்ணாம்புக்காளவாயில்
தம்மையே சுடமுயன்றவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்
கிடைக்காத சந்தனக்கட்டைகளுக்கெனத்
தம் கைகளையே எலும்பு வரை
தேய்த்து எடுத்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்
தம் சுயத்தை நிரூபிக்க
தீயினிற்புகவும் முயற்சித்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்
தம் கால்களை முதலையின்
வாயிற்கொடுத்து கதறிய அஃறிணையின் மீதான வன்முறையைத்தடுத்தாட்கொள்ளக்கூட கடவுள் வந்தார்
அருகில் நடந்த வன்முறைகளை
இதுகாறும் கண்டுகொள்ளாமலிருந்த
அதே கடவுளை யாசிக்க
இந்தக்கவிதையை நேர்மறையாக
முடிக்க விரும்பி
தலைப்பை மீள வாசிக்கக்கோருகிறேன்.
அதுவே உங்களுக்கும் விருப்பமெனில்
- சின்னப்பயல் (