கீற்றில் தேட...

தலையில் ஒன்றிரண்டு நரைமுடி..

முகத்தில் ஒரு வித மூப்பு...

மனதில் எப்போதும் ஏதோவோர் ஏக்கம்....

நகரத்துத் தரகர் வீட்டுத்

தகரப் படலைக்கும்

கிராமத்து எங்கள் வீட்டு

திண்ணைப் படிக்குமாய்

நடந்து நடந்தே தேய்ந்து போனது-என்

பெற்றோரின் பாதங்கள்.

என் சமூக அமைப்பில்

கிராமத்து ஏழைத்

தமிழச்சி நான்

நாற்பது கடந்தும்

அங்கங்கு நரைவிழுந்தும்

காப்பேதும் இல்லா

கலைக்கோயிலாய் -இன்னும்

யாரோ ஓர் மீட்பனின் வருகையை

எதிர்பார்த்தபடி.....