கீற்றில் தேட...

வட்டியுடன் தருவதாய் சொன்ன தேதியில்
கொடுத்ததை வசூலிக்க வாசலில் நிற்கிறான்
கடன்காரன்...

அவனுக்கு கொடுக்க என்னிடம்
ஒரு சில நாணயங்களை தவிர வேறெதுமில்லை..

அதையும் கொடுத்துவிட்டால்
நான் நாணயமற்றவனாகி போவேன்
கொடுக்காவிட்டாலும் தான்.