மெளனமாய்
தன்னை மறைத்து
வாழ்ந்த மனிதன்
மெளனம் போல்
சொற்கள் இன்றி
மறைந்து போனான்..!
பற்றுக்கு இடம் கொடுத்து
வாழும் உலகில்
புற்றுக்கு இடம் கொடுத்து
போய் சேர்ந்தான்..!
காவியம் போல் வளர்ந்து வரும்
கருத்தோவியன்
வழியிலேயே முடிந்து விட்ட
சிறுகதையானான்..!
ஆயிரம் கனவுகளுடன்
வாழ்ந்த மனிதன்
ஒரு அதிகாலைக் கனவைப் போல்
முடிந்து போனான்..!
அதிகாலை என்பது
ஒரு நாளின் தொடக்கம்..!
அது தொடங்கும் வேளை
முடிந்து போனான்
அதிகாலை மரணம்..!
முடிவற்ற அன்பே..!
உனக்கொரு முடிவு நாளா?
முடியாது
உன் நினைவு எப்போதும்..!
விடியாது இனிமேல்
எந்நாளும் எனக்கு..!
(தனது 28 வது வயதில், சமீபத்தில் புற்றுநோயால் மரணமடைந்த போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கவிஞர் மகா.ராசாவுக்கு நினைவஞ்சலி)