கீற்றில் தேட...

என் காதற் தலைவியின் கண்கள் கதிரவனைப் போலில்லை;
பவளம் அவள் இதழ்களின் சிவப்பைவிட, மிகச் சிவப்பு;
பனி வெண்மையெனில், அவள் மார்புகள் பின் ஏன் பழுப்பு நிறமாக இருக்கின்றன;
முடிகள் கம்பிகளானால், கரும் கம்பிகள் அவள் தலையில் வளர்கின்றன.


நான் பார்த்திருக்கிறேன் ரோஜாக்களின் சிவப்பு வெண்மையாகிய இருபுறமும்,  
ஆனால் அத்தகைய ரோஜாக்கள் காணவில்லை அவள் கன்னங்களில்;
என் தலைவி விடும் மூச்சுக் காற்றில் எழும் வாசத்தைவிட
சில வாசனைத் திரவியங்களில் அதிகக் களிப்பிருக்கிறது.


அவள் பேசுவதைக் கேட்க நான் விழைகிறேன், எனக்கு நன்றாகத் தெரியும்
அந்த இசை மிக அதிக இனிமையான நாதம்,
நான் ஒருபோதும் பெண்தெய்வம் செல்வதைப் பார்த்ததில்லை என ஒத்துக் கொள்கிறேன்;
என் காதற்தலைவி, அவள் நடக்கையில், பூமியில் அடியொற்றி நடக்கிறாள்:


இருந்தாலும், பேரின்ப உலகே, அவள் தவறுதலான ஒப்புமையைப் பொய்யாக்கினாள்
நான் நினைக்கிறேன், என் காதல் அரிதிலும் அரிது.

(Ref: My mistress' eyes are nothing like the sun, William Shakespeare Sonnet 130)

(ஷேக்ஸ்பியரின் 130 வது பதினான்கு வரிப் பாடல்)

Sonnet - பதினான்கு வரிப் பாடல்

தமிழாக்கம் வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)