கீற்றில் தேட...

நளிகடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போல
இயக்க வியல் பொருள்முதல் ஞானம்
மயக்கமறச் சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண்
வளர்பொருள் தாமும் அரசதி காரமும்
உழைப்பவர் கையில் முழுதாய்க் கிடைத்திட
இழையும் தவறா நுண்ணிய நோக்கொடு
சந்தை முறைக்கு எதிராய்ப் பெரும்போர்
தொடுத்துத் தொடர்ந்து வெற்றி பெறுதல்
விடுதலை வேண்டும் வினைஞர் கடனே
 
(கடல் நடுவே நீர் கிழித்துச் செல்லும் கலம் போல, (உழைக்கும் மக்களின் அறிவாயுதமான) இயக்கவியல் பொருள் முதல் வாத மெய்ஞ்ஞானம் (புரட்சிக்கான) தெளிவான (போராட்டப்) பாதையை வகுத்துக் கொடுக்கும். அப்பாதையின் வழியே சென்று, பொருளாதாரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் (உழைக்கும் வர்க்கம்) முழுமையாகக் கைப்பற்ற, முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எதிராகப் பெரும் போரைத் தொடுப்பதும், இறுதி வரை  இம்மியளவும் தவறாத படி அப்போரைத் தொடர்ந்து நடத்திச் சென்று வெற்றி பெறுவதும் உழைக்கும் மக்களின் கடமையாகும்.)
 
- இராமியா