கைக்குட்டை பரிசளித்தால்
நட்பறுந்து போகும்..!
உன் நம்பிக்கைகள் பொய்க்க
வலிய பெற்றேன்
உன் கைக்குட்டைகளை..!
அழுக்குப் படியக் கூடாதென
தவிர்க்கிறேன்
அதில் முகம் துடைக்கவும்
கை துடைக்கவும்..!
மலர்ந்த வெள்ளை அல்லியை
தொடுதல் போல்
மென்மையாய் எடுத்துப் போகிறேன்
உன் கைக்குட்டையை..!
நீயற்ற பொழுதுகளில்
இருப்பதாய் பாவனை செய்கிற
உன் கைக்குட்டையை
இறுகப் பற்றி நடக்கிறேன்
உன் கரம் பற்றியதாய்..!
உறங்கத் துவங்கும் வேளை
என் முகம் போர்த்திக் கிடக்கிற
கைக்குட்டையில்..
வந்து போகின்றன உன் முகங்கள்
அழுவதாயும்
புன்னகைப்பதாயும்..!
- முகமது சபி (