இருபத்தியொரு வருடங்கள் சிறையிலிருந்து
ஏற்கெனவே செத்துவிட்டோம்
திரும்பவும் எதற்காக
இப்போதும் எங்களை தூக்கில் போடுகிறீர்கள்..
 
எல்லையோரத்தில் பக்கத்துநாட்டுவீரனை
ராணுவம் சுட்டுக் கொன்றபோது
தேசபக்தி என்றீர்கள்
அந்நியநாட்டிற்குள்
அணுஆயுதங்களோடு நுழைந்து
மக்களை நிர்மூலமாக்கியபோது
பாதுகாப்புப்படை என்றீர்கள்
என்கெளண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு
தாக்கவந்ததால் சுட்டுத்தள்ளினேன் என்றீர்கள்
உங்கள் கொலைக்கார அட்டூழியங்களுக்கு
இனி என்னவெல்லாம் பெயர்வைப்பீர்கள்..

Pin It