தனித்த உலகொன்றை சமைக்கையில்
உடனிருந்தாய் நீ
கூடவேயிருப்பேனென மொழிந்தாய்
கரம்பற்றி காதலுரைத்தாய்
உனது கூடு
உனது குஞ்சுகள்
உனது வானமெனும்
அடைவை எய்தும்போதெலாம்
தஞ்சம் புகுந்த
பறவையதை மறந்து
சிறகுகளை அகல விரித்து
பறக்கிறாய் எங்கெனும்
அது குஞ்சோடும்
ஆறாத காயங்களோடும்
அலகினால் பொறுக்கும்
நெல்மணிபோல
சிறுக சிறுக
காதலை சேமிக்கும்
விட்டுப்பறந்த இடத்தில்
காத்திருக்கும்
காதலை ஓயாது கூவும்….!!!