நான்
கவிதை எழுதுகிறேன்

எதை எதை
எழுதவேண்டுமோ
அதை அதை
எழுதுகிறேன்

எப்பப்ப
எழுதவேண்டுமோ
அப்பப்ப
எழுதுகிறேன்
 
எனக்காவும் எழுதுகிறேன்
எதற்காகவும் எழுதுகிறேன்
சிலருக்காகவும் எழுதுகிறேன்
அனைவருக்காகவும் எழுதுகிறேன்

ஒரு மின்னல்
என்னை வெளிச்சப்படுத்துகிறது
அல்லது
ஒரு மின்னலை
நான் வெளீச்சப்படுத்துகிறேன்

மவுனம்
பேசச்சொல்கிறது
அல்லது
மெளனத்தை
நான் பேசுகிறேன்

மழையில் நனைகிறேன்
அல்லது
நானே
மழையாகிவிடுகிறேன் 

தென்றல்
என்னைத் தீண்டுகிறது
அல்லது
தென்றலை நான்
தீட்டுகிறேன்

புயல்
என்னிடம் மையம் கொள்ளும்
அல்லது
புயலில் நான் மையம்கொள்வேன்

நான் எழுதுவது
கவிதையாகிறது
அல்லது
கவிதையை
நான் எழுதுகிறேன்

கவிதை
என்வழியாய்த்
தன்னை எழுதிக்கொள்கிறது
அல்லது
நான் கவிதைவழியாய்
என்னை எழுதிக்கொள்கிறேன்

இப்படித்தான்
நானும் கவிதையும்
ஒருவரையொருவர்
எழுதிக்கொள்கிறோம்

எல்லார்க்கும் சொல்வது
இதுதான்...

நான்
கவிதை எழுதுகிறேன்

Pin It