பல்லிகளை நேசிப்பது குறித்து
என் விடுதி அறைகளிலிருந்துதான்
நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்
விடுமுறை முடிந்து
அறைக்குள் திரும்பும்போது
எல்ல இடங்களிலும்
அதன் கால் தடயங்கள்
சுவற்பல்லிகள்
சப்தம் எழுப்பும்போதெல்லாம்
பாட்டியின் உச்சுகொட்டும் சப்தம்
என் அறை முழுவதும் வழிந்து நிரம்பி
அவளை ஞாபகப்படுத்தும்
உச்சந்தலையில் விழுந்தால்
உடன் மரணமென்ற
அப்பாவின் அசைக்கமுடியாத
ஆயுட்கால நம்பிக்கையை
பொய்யாக்கி இருக்கிறது
எல்லா சமயங்களிலும்
மனிதர்களின் சகுனங்களை
தீர்மானிக்கும் பல்லிகளின்
மரணத்தை
கதவிடுக்கிலோ
அடுக்களை பரணிலோ
ஜன்னல் ஒரங்களிலோ
கொதி நீரிலோ
தீர்மானம் செய்வதென்னவோ
மனிதர்கள்தானே?
- பிரேம பிரபா (