கடந்துவிட்ட பேச்சுவார்த்தைகள்
பிச்சை போட்ட கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளாததால்
இல்லயென மறுக்கப்பட்டதாம் ஈழம்
சொல்கிறது
இலங்கை அரசாங்கம்.
தனித்தும் இல்லாமல்
சேர்த்தும் கொள்ளாமல்
தவிப்போடு தொடர்கிறது வாழ்க்கை.
இணைவதும்
ஏற்பதுமான இயல் வாழ்வு இனி எப்போ?
இல்லை என்று சொல்லாவிட்டாலும்
யார் நீ.....
என்பதான தள்ளி வைப்பு.
பேசித் தீர்க்காத வார்தைகளாலேயே
இடைநிறுத்தப்பட்டதாய் உணர்கிறேன்.
எனக்கான தீர்மானங்கள்
அந்த வார்தைகளுக்குள்ளும்
அடங்கியிருக்கலாம்.
நீ
மௌனித்திருந்தாலும்
நாடு கடந்த
போராட்டம்போலத் தொடரும்
என்
பேசித் தீர்க்காத வார்த்தைகள்!!!
- ஹேமா, சுவிஸ் (