கருத்த இரவின் நீண்டுகொண்டே போகும்
தார் சாலையின் தூரத்து வெளிச்சமென நீ
நம்பிக்கையை இரைத்துக்கொண்டே போகிறாய்
வெறுமை நிரம்பிக்கிடக்கும் என் இதயத்தில்
நீ ஒருகொத்து ரோஜா மலர்களை வீசிவிடுகிறாய்
அவை ஒவ்வொரு இதழாய் பிரிந்து நரம்புகளெங்கும் பரவி
மூளையை எட்டும்போது நீ அங்கில்லை
நானும் காதலும் தவித்துக்கிடக்கிறோம்
நீ என் வாழ்வு விடியும் வரை காத்திருக்கத்
தயார் என்றாலும் என் இரவுகள்
நீண்டுகொண்டே போவதின் நிஜம்
உனக்கு பயமூட்டலாம்
நான் லட்சியப்பறவை என் வானம்
மேகங்களில்லாதது- நீ வானவில்லை எதிர்பார்க்கிறாய்
மெளனம் நீளும் நம் சந்திப்புகள் முடியும்போது
சாதிப்பதற்கு சில வார்த்தைகளை வீசிப்போகிறாய்
பணம்தின்னிக்கழுகுகள் சுற்றமும் நட்புமாக இருப்பின்
எதுசெய்தால் எது கிடைக்கும்
தொடர் ஓட்டம் காதல் காதலை விழுங்கும்....